எம்.சாண்ட் எடுப்பதாகக் கூறி மணல் திருட்டில் ஈடுபட்ட கேரள பாதிரியார்கள் கைது..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற மணல் கடத்தல் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லிடைகுறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் அம்மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு எம்.சாண்ட் உற்பத்தி ஆலை நடத்த கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
எம்.சாண்ட் தயாரிப்பதாகக் கூறிவிட்டு, வண்டல் ஓடைகளிலிருந்து சுமார் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு அவர் ஆற்று மணலைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து, 9 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, ஒரு பிஷப் உட்பட மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 6 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கொரோனாவாலும் மற்றொருவர் சிறுநீரகக் கோளாறாலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments