நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற பாரபட்சம் காட்டாதீர் - அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவதாகவும், சமீபத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தொடரப்பட்ட வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் கோவில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறிய நீதிபதி, உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரிய வந்தால் அரசுக்கு தான் சிக்கல் என கருத்து கூறிய நீதிபதி, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.
Comments