ஹிஜாப் விவகாரம் : கர்நாடகாவில் - பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஷ்வரூபம் எடுத்து சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளதை அடுத்து, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தாவண்கரே மாவட்டம் ஹரிகர் பகுதியில் உள்ள அரசு பியூசி கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பகல்காட் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் காவித்துண்டு அணிந்து போராட்டம் நடத்தினர். பதற்றத்தை தணிக்க ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்,ஆசிரியர்கள், பொதுமக்கள், அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்
Comments