ஆளுநரின் மதிப்பீடு தவறானது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2540


நீட் விலக்கு மசோதா - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு

நீட் விலக்கு மசோதா, முன்பு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது - அமைச்சர்

நீட் தேர்வு அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது - அமைச்சர்

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறார்கள் - அமைச்சர்

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்தார் - அமைச்சர்

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க பரிந்துரை வழங்க திமுக ஆட்சிக்கு வந்த உடன், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது

உயர்நிலை குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது - அமைச்சர்

செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது - அமைச்சர்

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு பரிந்துரை குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்வி, கருத்துகளுக்கு அமைச்சர் பதில்

நீட் விலக்கு மசோதாவை பரிந்துரைத்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்து தவறானது - அமைச்சர்

பெற்றோர், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்தை கேட்டு, சட்டநுட்பங்களை ஆய்வு செய்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழு, அறிக்கை அடிப்படையில் பரிந்துரை செய்யவில்லை - ஆளுநருக்கு பதில்

ஆளுநரின் கருத்து, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலை குழுவை அவமதிக்கும் வகையில் உள்ளது - அமைச்சர்

தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவோர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆளுநர் தனது சொந்த கருத்துகளை சுட்டிக்காட்டுவது என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது; மரபும் அல்ல

உச்சநீதிமன்றம், வேலூர் சிஎம்சி வழக்கில் அளித்த தீர்ப்பை ஆளுநர் மேற்கோள்காட்டி இருப்பது தவறானது

நீட் விலக்கு மசோதா குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மொத்த மதிப்பீடும் தவறானது - அமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments