இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

0 2091

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 67 ஆயிரத்து 597 ஆக பதிவாகியுள்ளது.

எனினும் ஒரு நாள் பலி எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்து ஆயிரத்து 188 ஆக உள்ளதுடன், 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினசரி கொரோனா பாதிப்பு வீதம் 5 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 9 லட்சத்து 94 ஆயிரத்து 891 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments