அமெரிக்காவில் சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கிய செல்லப்பிராணி பத்திரமாக மீட்பு
அமெரிக்காவின் coloroda மாகாணத்தில் தீப்பற்றி எரிந்த காரில் புகை மூட்டத்தில் சிக்கி தவித்த நாய் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது.
Douglas County யில் அமைந்துள்ள சாலை ஒன்றில் கார் ஒன்று கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருந்தது. இதனை அடுத்து காரின் உரிமையாளர் உடனடியாக இறங்கி விட்ட நிலையில் காரில் இருக்கும் தன்னுடைய செல்லப்பிராணியை காப்பாற்றும்படி கதறினார்.
அப்போது அந்த வழியாக வந்த துணை ஷெரீப் உடனடியாக விரைந்து சென்று காரின் கண்ணாடிகளை தடியால் உடைத்து நாயைப் பத்திரமாக எடுத்து அருகில் இருந்த பனிக்கட்டியின் மீது வைத்து உயிரை காப்பாற்றினார்.
Comments