கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல்

0 2255

அசாம் மாநிலம் கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளன.

கஸி பெண் புலி கடந்த வாரம் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிதாக பிறந்த 2 புலிக் குட்டிகளையும் சேர்ந்த பூங்காவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

கடந்த ஆண்டு சுல்தான் மற்றும் சுரேஷ் என்ற 2 புலிக் குட்டிகளுக்கு தாயான கஸி தற்போது மேலும் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகம் குட்டிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments