நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் அதிக வளர்ச்சி அடையும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடையும் எனக் கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்தாண்டில் பெரிய பெருளாதாரங்களுக்கு மத்தியில் இந்தியா அதிக பொருளாதார வளர்சி அடையும் நாடாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டின் தாக்கங்கள் என்ற தலைப்பில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை விரிவுபடுத்தும் கதி சக்தி திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் பன்முக அணுகுமுறையில் வளர்ச்சி அடையும் என்றார்.
முதலீடு மற்றும் வணிக நடவடிக்கைகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இடையூறாக இருந்த ஆயிரத்து 700 சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments