தாய்க்கு காதலன்.. மாணவிக்கு வில்லன்.. கம்பி எண்ணும் மருத்துவன்..! போக்சோவில் தூக்கிய போலீஸ்

0 6367
காரைக்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை காதல்வலையில் வீழ்த்திய எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் , காதலியின் மகளான பள்ளிச்சிறுமியிடமும் அத்துமீறியதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காரைக்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்ணை காதல்வலையில் வீழ்த்திய எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் , காதலியின் மகளான பள்ளிச்சிறுமியிடமும் அத்துமீறியதால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவரது தாய் காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போது காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான பி.கே.என். மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக்கியுள்ளார். அப்போது மருத்துவமனை உரிமையாளரும் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர் மோகன்குமார், சிறுமியின் தாயாரை காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சிறுமியின் தாய், தனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை காரணம் சொல்லி டாக்டர் மோகன்குமா வீட்டிற்குரை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த மருத்துவர் இரவு வரை அந்த சிறுமியின் வீட்டிலேயே தங்கி சென்ற நிலையில், தாயின் நடவடிக்கை குறித்து தந்தைக்கு தொலைபேசி மூலம் மாணவி தெரிவித்துள்ளார் மாணவியின் தந்தையும், தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர் மோகன் குமாரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த சிறுமி ஆன் லைன் மூலமாக போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் மருத்துவர் உடனான தனது தாயின் காதல் வாழ்க்கை குறிவித்து விவரித்திருந்த மாணவி, தான் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும்போது தன்னை காரில் அழைத்து வருவதை வழக்கமாக்கிய டாக்டர் மோகன்குமார் அப்போது தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் மறுத்ததால் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கொரானா காலத்தில் மாணவி ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற டாக்டர் மோகன் குமார், பயாலஜி பாடம் சொல்லித் தருகிறேன் என கூறி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாணவி அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்டர் மோகன்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் எனவும் மாணவி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி உத்தரவின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி மாணவியின் புகார் குறித்து விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வில்லங்க மருத்துவர் மோகன்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments