சைகையை மீறி வேகமாக வந்த கார்.. சிறுமியை தள்ளிவிட்டு காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலர்.. குவியும் பாராட்டு..
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார், சாலையைக் கடந்து வந்த பள்ளிச்சிறுமி மீது மோத இருந்த நிலையில் அவளை தள்ளி விட்டு, காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 4-ம் தேதியன்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெண் காவலர், cecil கவுண்டி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையின் ஒரு புறத்தில் வந்த வாகனங்களை கைகாட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு எதிர்ப்புறத்தில் இருந்து சாலையைக் கடக்க காத்து நின்ற பள்ளிச்சிறுமியை கடந்து வருமாறு கூறினார்.
ஆனால் அந்த சிறுமி சாலையைக் கடந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சைகையை மீறி வேகமாக வந்து குழந்தையின் மீது கார் இடிக்க இருந்ததை நொடிப்பொழுதில் சுதாரித்த குட் இயர், அந்த சிறுமியை வேகமாக தள்ளிவிட்டு தான் அடிபட்டு விழுந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Comments