சாலையோர சாக்கடை கால்வாயில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்.. விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

0 2415
திருப்பூர் அருகே சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் அருகே சூட்கேஸில் மறைத்து வைத்து சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள பொல்லிக்காளிபாளையம் பிரிவு அருகே பிரதான சாலையின் சாக்கடை கால்வாயில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் சூட்கேஸை மீட்டதுடன், அதன் உள்ளே கழுத்து அறுத்து கொலை செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சூட்கேஸில் இருந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதனால் கொலை செய்யப்பட்டார் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments