விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம்.. 2 வாரங்களுக்குள் இடித்து நொறுக்க மீண்டும் அறிவுறுத்தல்

0 2979
டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட நாற்பது மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரக் கட்டடங்களை இரண்டு வாரங்களுக்குள் இடித்து நொறுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட நாற்பது மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரக் கட்டடங்களை இரண்டு வாரங்களுக்குள் இடித்து நொறுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

சூப்பர்டெக் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் விதிகளை மீறிக் கட்டிய கட்டடத்தை இடித்து நொறுக்கக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வீடுகளை வாங்க ஏற்கெனவே பணம் செலுத்தியோருக்கு ஆண்டுக்கு 12 விழுக்காடு வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்த அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதக் கட்டடத்தை இரு வாரங்களில் இடித்து நொறுக்க அறிவுறுத்தினர்.

தொடர்புடைய முகமைகளின் கூட்டத்தை மூன்று நாட்களுக்குள் கூட்டிக் கட்டடத்தை இடிப்பதற்கான கால அட்டவணையை இறுதி செய்யும்படி நொய்டா தலைமைச் செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments