கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.126 கோடி அபராதம்

0 5733


மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்துக்கு தென் கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஜெர்மன் நாட்டு சொகுசு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ், தென் கொரியாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள 15 டீசல் கார் மாடல்களின் கரிம உமிழ்வை குறைத்து கணக்கிடும் வகையில் அந்த வாகனங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் ஐரோப்பியத் தரநிலைகளுக்கு ஏற்ப கரிம உமிழ்வுகள் மிகக் குறைவாக உள்ளதாக விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக பென்ஸ் நிறுவனத்துக்கு 126 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே போல் ஓளடி, நிசான், போர்ஷே நிறுவனங்களுக்கும் தென் கொரிய அரசு அபராதம் விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments