பொங்கல் பரிசாக ரூ.5000 கொடுக்கச் சொன்ன திமுக ஒன்றும் தரவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தது அதிமுக அரசு என்றும், அப்போது ஐயாயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன திமுக தனது ஆட்சியில் எதுவுமே வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வந்தபின் எந்த ஒரு புதிய நலத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், அதிமுக ஆட்சிக்காலத்தில் முடிவுற்ற திட்டங்களைத் தான் திறந்து வைப்பதாகவும் தெரிவித்தார்.
Comments