கர்நாடகாவில் புர்கா அணிந்து வந்த மாணவியரைக் கல்லூரிக்குள் அனுமதித்தது நிர்வாகம்

0 1079

கர்நாடகத்தின் குண்டப்பூரில் புர்கா அணிந்து வந்த மாணவியரைக் கல்லூரிக்குள் அனுமதித்த நிர்வாகத்தினர் அவர்களைத் தனி வகுப்பறையில் அமரவைத்துள்ளனர்.

புர்கா அணிந்து கல்லூரிக்குள் வரத் தடை விதிக்கப்பட்டதால் கடந்த வாரத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துக் கர்நாடக அரசும், எதிர்க்கட்சியினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த நிலையில் இன்று புர்கா அணிந்து வந்த மாணவியரைக் கல்லூரிக்குள் அனுமதித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்களை மற்ற மாணவியருடன் சேர்க்காமல் தனி வகுப்பறைகளில் அமர வைத்துள்ளனர். இதனிடையே கல்லூரி அருகே கூர்மையான ஆயுதங்களுடன் நின்ற இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மூவர் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments