திருமணமான 56 நாட்களிலேயே வரதட்சணை கொடுமை ; மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்

0 3706
மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்

காஞ்சிபுரத்தில், திருமணமாகி 56 நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்பதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி, இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும், நவலூரை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்ணுக்கு 40 சவரன் நகைகள் உள்ளிட்டவைகள் சீர் வரிசையாக செய்து தரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலும் நகைகள் மற்றும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக, தாம்பரம் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, சமாதானம் பேசி மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments