உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்சாரம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நேரடியாக பிரச்சாரக் களத்தில் இறங்குகிறார்.
பிரதமருடன், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் மேடையில் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டங்களுக்கு தேர்தல்ஆணையம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
பிரச்சார அரங்கில் 1000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் காணொலி வாயிலாக காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments