திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணமாக வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணமாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் நடைபயணமாக நேற்று மாலை திருப்பதி வந்தடைந்தனர். இவர்கள் யாருக்கும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் இல்லாத தால் திருமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தமிழக பக்தர்களோ நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் வரை நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டுமென கோரியும் அடிவாரத்தில் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் திருமலைக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அனைவரும் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments