நாமக்கல்லில் கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி விருந்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
போதமலை கள்ளவழி கருப்பனார் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று முப்பூசை நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கருப்பனாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு காணிக்கை கொடுக்கப்பட்ட விலங்குகளை பலியிட்டனர். விடிய விடிய நடைபெற்ற இவ்விழாவில் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Comments