இன்று முதல் சொத்துகள் வாங்க மாட்டேன், தொழில் செய்ய மாட்டேன் - பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங்

0 2524

இன்று முதல் தமது பெயரிலும் தமது மனைவி பெயரிலும் எந்த வித சொத்தும் வாங்கப் போவதில்லை, எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்று பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி உறுதியளித்துள்ளார்.

நவ்ஜோத் சித்துவுக்கும் சரஞ்சித்துக்கும் இடையே உட்கட்சிப் பூசல் வலுத்த நிலையில் நேற்று முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித்தின் பெயரை கட்சியின் தலைமை சார்பில் ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சரண்ஜித்தின் உறவினர்  சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சொத்து வாங்க மாட்டேன் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments