பெண்கள் அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் - கமல்ஹாசன்
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்த அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தாலே நாடு நன்றாக மாறி விடும் என தெரிவித்தார்.
ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு, சமூக சேவகர்களை நாம் தேட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் தக்கவைத்த ஏழ்மையை நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரம் மக்கள் சேவை பற்றியும், நேர்மையை பற்றியும் இருக்கும் என்றும் மக்களுக்கு நல்லது செய்யும் வாய்ப்பாக இத்தேர்தலை பார்ப்பதாகவும் கூறினார்.
Comments