அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உள்ளது - சி.வி.சண்முகம்
அதிமுக எந்த நிலையிலும் தனியாக தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் என்றும் ஒரு வாரமாக கட்சியினர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சி.வி.சண்முகம், கடந்த ஒரு வாரமாக அதிமுகவிற்கு பெரிய பாரம் குறைந்தது போல் உணர்வதாக குறிப்பிட்டார்.
Comments