சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவின் திருமணம்.!
நாகையில் 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையின் போது 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் பராமரிப்பில் வளர்ந்த சவுமியாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். நாகையில் சுனாமியின் போது தாய், தந்தையை இழந்து பாதிக்கப்பட்ட 99 குழந்தைகள் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
அவர்களில் சவுமியா மற்றும் மீனா ஆகிய குழந்தைகளின் செலவுகளுக்கு பொறுப்பேற்று அவர்களை பராமரித்து வந்த ராதாகிருஷ்ணன் இருவருக்கும் வேலை வாய்ப்பு வரை பெற்றுத்தந்து உதவியுள்ளார்.
இருவருக்கும் 18 வயதான போது அவர்களைநாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி -மணிவண்ணன் தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில் இன்று சவுமியாவின் திருமணம் நடைபெற்றது.
Comments