லதா மங்கேஷ்கர் மறைவு - இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

0 5356

லதா மங்கேஷ்கரின் மறைவை அறிந்து தனது இதயம் நொறுங்கி விட்டதாகவும்,தெய்வீக குரலால் மக்களை எல்லாம் மயக்கி அவர் தன் வசம் வைத்திருந்தார் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், லதா மங்கேஷ்கரின் மறைவு தனது மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், அவரது மறைவை பேரிழப்பாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாடகி மட்டுமின்றி இந்திய இசையின் ஆன்மாவாக லதா மங்கேஷ்கர் திகழ்ந்ததாகவும், எப்போதும், எல்லோராலும் அவர் நினைவுக் கூறப்படுவார் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், லதா மங்கேஷ்கர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தான் வெளியிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments