குடிபோதையில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் சில்மிஷம்.. பேருந்தில் இருந்து இறக்கி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 8971

கும்பகோணத்தில் அரசு பேருந்தில் பயணித்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷம் செய்த நபரை, அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்றிரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் பயணித்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த பெண்கள், கும்பகோணத்தில் உள்ள தங்களது உறவினர்களிடம் செல்போனில் பேருந்தில் நடந்தவற்றை கூறியதை அடுத்து, கும்பகோணம் நால்ரோடு பகுதியில் பேருந்தை வழிமறித்த பெண்ணின் உறவினர்கள் அந்த நபரை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த நபர் காவல்துறையைச் சேர்ந்த அமைச்சுப் பணியாளர் என தெரியவரவே போலீசார், அவனை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments