அலைசறுக்கு போட்டியில் இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளி 49 வயது அமெரிக்க வீரர் முதலிடம்

0 6030

அமெரிக்காவின் ஹவாய் தீவில் நடைபெற்ற அலைசறுக்கு போட்டியில் ஏராளமான இளம் வீரர்களை பின்னுக்குத் தள்ளிய கெல்லி ஸ்லேட்டர் 49 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார்.

1992ம் ஆண்டு, 20 வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மிகவும் இளம் வயதில் உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த ஸ்லேட்டர், அலைசறுக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வயதான வீரர் என்ற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார்.

5 நாட்களில் 50வது பிறந்த நாளை கொண்டாட உள்ள ஸ்லேட்டர், ராட்சத அலைகளுக்கு பேர் பெற்ற பான்ஜாய் பைப்லைன்கடல்பகுதியில், அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து முதலிடம் பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments