போட்டிப்போட்டு வாக்குசேகரிப்பு.. ஹாக்கி விளையாடியும், டீ தயாரித்தும் பிரச்சாரம்.!

0 3874

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹாக்கி விளையாடியும், தேநீர் போட்டுக் கொடுத்தும் வித விதமாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டத்தில் வீடு வீடாக சென்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டிப்போட்டு வாக்குகளை சேகரித்தனர். மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன், ஹாக்கி விளையாடிய திமுக, அதிமுக வேட்பாளர்கள் அவர்களுக்கு துண்டு அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், உணவகத்தில் தோசை சுட்டும் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

இதனிடையே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோடம்பாக்கம் மண்டலத்தின் 112ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர், தனி நபராக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த டோனி சிங் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர் சுமார் 60 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில், டோனி சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து அவரது தோழர்களான இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர், பொதுமக்களுக்கு மீன்களை வெட்டிக் கொடுத்தும், தேநீர் தயாரித்துக் கொடுத்தும் வாக்குகளை சேகரித்தார்.

 

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் அதிமுக பெண் வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments