ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கி கலசங்களுக்கு பூர்ணாகுதி நடைபெற்று, கோவிலில் உள்ள ஐந்து ராஜகோபுரங்கள், மூலவர் சன்னதிகள் உள்ளிட்ட இடங்களில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிறகு, வேத மந்திரங்கள் கோபுர கலசத்தின் மீது வேத விற்பன்னர்கள் புனித நீரை ஊற்றினர்.
கோவிலில் உள்ள சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகு, ஹெலிகாப்டர் மூலம் கோவிலில் உள்ள ஐந்து கோபுரங்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டன.
கும்பாபிஷேக பெருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திராளான பக்தர்கள் பங்கேற்று பக்திப்பெருக்குடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில், சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட புற்றிடங்கொண்டீசர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில்,சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி விமான கோபுரங்கள் மீது புனித நீரை ஊற்றினர்
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஸ்ரீ காளத்தீஸ்வர வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு திருவழுதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது. யாகசாலை பூஜையுடன் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது.
Comments