எவரெஸ்ட்டின் உயரமான பனிமலை வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தகவல்

0 3645

பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பமயமாதலால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான பனிமலை மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 55 மீட்டர் வரையில்  குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ள பனிப்பாறையின் அடர்த்தியான பகுதி அழிந்து, அடியில் உள்ள பனிப்பகுதி மீது சூரியன் ஒளி படர்வதால் உருகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றர்.

இமாலய மலைத்தொடர்களை நம்பி குடிநீருக்காக சுமார் ஒரு பில்லியன் மக்கள் உள்ளனர். எனவே, பனிப் பாறைகள் உருகினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என பருவநிலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments