நெல்லையில் திருட்டு வழக்கில் கைதானவன் லாக்அப்பில் உயிரிழந்தவன் கொலையாளி என தகவல்

0 3267

நெல்லையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவன் லாக்அப்பில் உயிரிழந்த நிலையில் அவன் ஒரு கொலையாளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலப்பாளையத்தை சேர்ந்த சுலைமான் என்பவனை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்தனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் சுலைமான் திடீரென உயிரிழந்தான். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கொக்கிரகுளம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது உசேன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் முருகன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது முருகன்,முகமது உசேன் மற்றும் சுலைமான் ஆகியோர் நண்பர்கள் என்பதும் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சுலைமான் முகமது உசேனை கொலை செய்து விட்டு தப்பியதும் தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments