டெல்லியில் காற்று மாசு தரத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
டெல்லியில் காற்று மாசு தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மாசு பரவுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசு ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியை விடவும் ஹரியானாவும் உத்தரப்பிரதேசமும் 25 சதவீதம் கூடுதலான பயிர் கழிவு எரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments