மொராக்கோ நாட்டில் 104 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

0 3549

மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த 5 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

25 சென்டி மீட்டர் விட்டமுள்ள கிணற்றில் 104 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் ராயனை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வந்தனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய குழித் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட இடையூறுகளால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை மீட்டதாகவும், வெளியில் கொண்டு வந்த சிறிது நேரத்தில் ராயன் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 5 நாட்களாக உயிருக்கு போராடி வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments