ஜம்மு காஷ்மீர் , லடாக் பகுதியில் சிக்கி தவித்த 100 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

0 3003

ஜம்மு காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளில் பெய்து வரும் கனமான பனி மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டும் சாலைகளை பனி சூழ்ந்தும் காணப்படுகிறது. 

இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊருக்குத் திரும்பி வரமுடியாமல் தவிப்பதாக அறிந்த இந்திய விமானப் படையினர் அதிரடியாக களமிறங்கி நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை விமானம் மூலமாக மீட்டனர்.

இந்திய விமானப் படையின் ஏ.என். 32 விமானம் மூலமாக கார்கில், ஸ்ரீநகர் ஜம்மு போன்ற இடங்களில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments