கருத்தடை செய்த பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.1.20 லட்சம் தமிழக அரசு வழங்க உத்தரவு
கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பிறகும் பெண்ணுக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தைக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் குழந்தை பட்டப்படிப்பு முடிக்கும் வரை தமிழக அரசு வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2014ஆம் ஆண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின்னரும், தனக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், தனக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், இழப்பீடு கேட்க பெண்ணுக்கு உரிமை உள்ளது எனக் கூறி 3-வது குழந்தையின் பட்டப்படிப்பு வரை மாதம் 10 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டுமென்றும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்திலும் அரசு சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
Comments