நைஜீரியாவில் வேகமாக பரவும் லாஸ்சா வைரசுக்கு 40 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பரவி வரும் லாஸ்சா காய்ச்சலால் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரசான லாஸ்சா, 21 முதல் 30 வயது பிரிவினரையே அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 36 மாகாணங்களில் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் புதுத் தலைவலியாக 200-க்கும் மேற்பட்டோருக்கு லாஸ்சா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments