ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி சாம்பியன்
19-வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 44 புள்ளி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் ரெவ் 95 ரன்கள் குவித்தார். இந்திய வீரர்கள் ராஜ் பவா 5 விக்கெட்டும், ரவி குமார் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 47 புள்ளி 4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 195 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 47-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட விக்கெட் கீப்பர் தினேஷ் பனா இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதிகபட்சமாக ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகியோர் அரைசதம் விளாசினர்.
Comments