சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

0 3712

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான கண்ணாம்மாள் என்பவர், தான் பணியாற்றிய காலத்திற்கு ஊதிய உயர்வு, ஊதிய பாக்கி தர மறுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார்.

இதன் விசாரணையில், மனுதாரரின் பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, கல்வித்தகுதியை ஆராயாமல் 23 ஆண்டுகளாக பணியில் நீட்டிக்க அனுமதித்ததே சட்டவிரோதம் என நீதிபதி தெரிவித்தார். மேலும், பணியில் நீடித்த அவரை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் சட்டத்தை மீறிய செயல் என அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments