சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி சடன் பிரேக் அடித்ததால்,லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழையனூர் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இரும்பு லோடு ஏற்றி முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சடன் பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை பேருந்து ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து ஓட்டுநர், பயணிகள் என 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments