முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

0 2706

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் வீடுகளுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முதலமைச்சரின் உதவி மையத்தை தொடர்பு கொண்டு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டிலும், கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் வீட்டிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டறியப்பட்டதை அடுத்து, மிரட்டல் விடுத்த நபர் திருகோவிலூரைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments