மூன்றாம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் ரூ. 8432 கோடி நிகர இலாபம் ஈட்டியது எஸ்பிஐ
பாரத ஸ்டேட் வங்கி அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவில் எட்டாயிரத்து 432 கோடி ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டியதைவிட 62 விழுக்காடு அதிகமாகும். வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருமானமும் முந்தைய ஆண்டை விட ஆறரை விழுக்காடு அதிகரித்துள்ளது.
வங்கி வழங்கிய கடன்களின் மொத்தத் தொகையில் வீட்டுக் கடன் 24 விழுக்காடாக உள்ளது. இதுவும் முந்தைய ஆண்டைவிட 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.
வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புத் தொகையும் முந்தைய ஆண்டைவிட 9 விழுக்காடு அதிகரித்துள்ளது.
Comments