வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியல் வெளியீடு

0 13037

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் நிற்கவும், சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவனில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments