பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடம்

0 5912

பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சைப் பெற்று வரும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பின்னணி பாடல்களை பாடியுள்ள 92 வயதான லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 8ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வயதின் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments