கன்றுக்குட்டிக்காக 2 கி.மீ காரின் பின்னாடியே ஓடிய தாய் பசு..!
சிவகங்கையில், பசு ஒன்று தனது கன்றுக்குட்டியை எங்கோ கொண்டு செல்கிறார்கள் என நினைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் காரின் பின்னாலேயே ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வந்த பசு கருவுற்று இருந்த நிலையில், பொன்னான்குடி பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இடத்திலேயே கன்றை ஈன்றது. இதையடுத்து அந்த மாட்டையும் , கன்றையும் ஒரு நாள் முழுவதும் அங்கேயே வைத்து பராமரித்தனர்.
மறுநாள் கன்றை வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற போது, கன்றுக்குட்டியால் நடக்க முடியாத நிலையில், அந்த விவசாயி காரின் பின்புறம் வைத்து கன்றுக் குட்டியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையறியாத, தாய் பசு தனது கன்றின் பின்னாலேயே ஓடியது காண்போரை நெகிழ வைத்தது.
Comments