தலைநகர் டெல்லியில் கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டம்

0 2545

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை கடுங்குளிருடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்த நிலையில், தௌலா குவான் பகுதியில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி மெதுவாக பயணித்தனர்.

அடுத்த 3 நாட்களுக்கு டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலை, இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டெல்லியில் நேற்று காலை பெய்த மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 132 ஆக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments