தமிழ்நாடு முழுவதும் இன்று 21-வது மெகா தடுப்பூசி முகாம்

0 2976

தமிழகத்தில் இன்று 21ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என தமிழகம் முழுவதிலும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments