பாங்கோங் ஏரி மீது சீனா கட்டி வரும் பாலம் சட்டவிரோதமானது ; இந்தியா
லடாக் எல்லையருகே பாங்கோங் ஏரி மீது சீனா கட்டி வரும் பாலம் சட்டவிரோதமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் ஏரியின் இரண்டு கரைகளை இணைத்து சுமார் 500 மீட்டர் இடைவெளியின் மீது பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது.
இது கட்டிமுடிக்கப்பட்டால் வடக்குப் பகுதியில் உள்ள சீன ராணுவம் தனது படைகளை நகர்த்த 150 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவசியம் இருக்காது.அமெரிக்க விண் தொழில்நுட்ப செயற்கைக்கோள் மூலம் படம்பிடிக்கப்பட்ட பாலம் கட்டும் பணி கடந்த மாதம் வெளியானது.
இதன்படி எட்டு மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.1962 ஆம் ஆண்டு முதல் சீனா சட்டவிரோதமாக ஆக்ரமிப்பு செய்துள்ள பாங்கோங் பகுதியில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருவதாக இந்தியா ஆட்சேபம் எழுப்பி வருகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்
Comments