ஜம்மு-காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்

0 2837

ஆப்கானிஸ்தான் - தஜிக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் காஷ்மீர், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் அஸ்காசம் என்னுமிடத்தில் இருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் தஜிக்கிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை இந்திய நேரப்படி 9:46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தரைக்குக் கீழே 209 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காஷ்மீரிலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments