ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்

0 2921

வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி, ஐதராபாத் அருகே 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2-ம் தேதி முதல் நடைபெற்று வரும் யாகபூஜையில் தமிழகம், கேரளா, கர்நாடக, மராட்டியம் மாநில வேத பண்டிதர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை, ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த வளாகத்தில், 108 திவ்யதேசங்கள், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவ ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.

பத்ரா வேதி எனப் பெயரிடப்பட்டுள்ள 54 அடி உயரமுள்ள அடித்தளக் கட்டிடம், டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், பழங்கால இந்திய நூல்களை உள்ளடக்கிய நூலகம், கல்விக் கூடம், தியேட்டர் ஆகியவையும் இதே வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments