பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு

0 3052

பெரு நாட்டில் பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் பிரபல தொல்பொருள் ஆய்வு  தலமான Nazca Lines பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் டச்சு நாட்டினர் என்றும், 2பேர் சிலி நாட்டினர் என்றும் 2பேர் பெரு நாட்டினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் கூறும் போது செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments