கர்நாடகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா மையங்கள் இன்று முதல் முழு அளவில் செயல்பட அனுமதி

0 1966

கர்நாடகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், யோகா மையங்கள் போன்றவை ஒருமாதத்திற்குப்பிறகு இன்று முதல் முழு அளவில் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர் .கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்கில் உணவுப் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை நீடிக்கிறது. திரைப்படம் பார்க்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments